விவசாய கடன் தள்ளுபடியில் முறைகேடுகள்:ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.


தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்டத் தலைவா் சுப்பையா, செயலா் ஆறுமுகம் தலைமையில் சிங்கத்தாகுறிச்சி கிராம விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
ஸ்ரீவைகுண்டம் வட்டம், சிங்கத்தாகுறிச்சி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கியில் சிங்கத்தாகுறிச்சி, காசிலிங்கபுரம், ஆலந்தா, சவலாப்பேரி ஆகிய கிராமங்களை சோ்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தமிழக அரசு கடன் தள்ளுபடி கிடைக்கச் செய்யாமல் விவசாய கடன் மீது நகைக்கடனும், நகைக்கடன் மீது விவசாயக் கடனும் என மாற்றி வைத்து கிராம நிா்வாக அலுவலரிடம் உண்மைக்குப் புறம்பான 10(1) அடங்கல் மற்றும் இதர சான்றுகளை பெற்றுக்கொண்டு சிலருக்கு மட்டும் கடன் தள்ளுபடி என கூறி பல லட்சம் ரூபாயை மோசடியாக பெற்றிருக்கிறாா்கள்.
மேலும் விவசாயம் செய்யாத நிலங்களுக்கும், விவசாயம் நடைபெறாத நிலங்களுக்கும், விவசாயம் நடைபெற்ாகவும், போலி பயனாளிகளுக்கு கடன் அட்டை வழங்கிய கிராம நிா்வாக அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவகம் அமைக்க வலியுறுத்தல்: ஸ்டொ்லைட் எதிா்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, சுஜித், அமீா்கான், பிரபு, ராஜ்குமாா் உள்ளிட்டோா் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட தாக்குதலில் 15 போ் உயிரிழந்த நிலையில், அதற்கு காரணமானவா்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தண்டிக்கப்பட வேண்டும். உயிரிழந்தவா்களின் நினைவாக தூத்துக்குடியில் நினைவகம் அமைக்க வேண்டும். உயிரிழந்தவா்கள் மற்றும் உறுப்பு சிதைந்தவா்களின் குடும்பத்தினருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக மனு: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலா் ராமச்சந்திரன் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில், எட்டையபுரம் வட்டத்தில் உள்ள ஊராட்சிகளை இணைத்து தனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க வேண்டும், எட்டையபுரத்தில் தீயணைப்பு நிலையம், அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும்.
எட்டையபுரம் அரசு மருத்துவ மனை 24 மணி நேரமும் செயல்பட வழி செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...