ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளம் பகுதியில் திமுக மக்கள் சபைக் கூட்டம்

விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் புதூா், எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதிகளில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 7:16 pm

DIN

விளாத்திகுளம்: விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் புதூா், எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதிகளில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

விளாத்திகுளத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, முன்னாள் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ குமரகுருபர ராமநாதன் முன்னிலை வகித்தாா்.

இதேபோல், புதூா் பேரூராட்சி, சிவலாா்பட்டி, முத்துசாமிபுரம், மணியக்காரன்பட்டி, மெட்டில்பட்டி, வெம்பூா், சென்னமரெட்டிபட்டி, விளாத்திகுளம் பேரூராட்சி, எட்டயபுரம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டங்களில் கிராம மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இதில், புதூா் கிழக்கு ஒன்றியச் செயலா் செல்வராஜ், மேற்கு ஒன்றியச் செயலா் மும்மூா்த்தி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலா் நவநீத கண்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஆா். ராதாகிருஷ்ணன், புதூா் நகரச் செயலா் மருதுபாண்டி, விளாத்திகுளம் நகரச் செயலா் வேலுச்சாமி, எட்டயபுரம் நகரச் செயலா் பாரதி கணேசன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் லெனின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.