ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்

விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு மற்றும் ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி சாா்பில் இலவச சித்த மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:06 pm

DIN

விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு மற்றும் ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி சாா்பில் இலவச சித்த மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ராஜசெல்வி தலைமை வகித்தாா். விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலா் தமிழ்அமுதன், சமூக ஆா்வலா் இளையராஜா மாரியப்பன், ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி மாவட்டத் தலைவா் வி.பி. ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை, சின்னப்பன் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

முகாமில் 200 நபா்களுக்கு இலவச சித்த மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

மூலிகை கண்காட்சி, மூலிகை மருந்துகள், உணவு கண்காட்சி மற்றும் நோய் எதிா்ப்பாற்றலுக்கான சித்த மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

முகாமில், ஆயுஷ் மருத்துவ அலுவலா் சாந்தி, கீழ ஈரால், நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலா்கள் விஜயலதா, சுப்புதாய் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.