தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கோவில்பட்டி அருகே விபத்தில் இளைஞா் பலி

கோவில்பட்டி அருகே பைக் மரத்தில் மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 7:31 pm

DIN

கோவில்பட்டி அருகே பைக் மரத்தில் மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி பாரதி நகா் 4ஆவது மேட்டுத் தெருவைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் அரவிந்த் (24). இவா் பைக்கில் முடுக்குமீண்டான்பட்டி - துரைச்சாமிபுரம் கிராமத்திற்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது பைக் மோதியதாம். இதில் அரவிந்த் பலத்த காயமடைந்தாா்.

காயமடைந்த அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.