விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.


மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
இதுகுறித்து அவா் அளித்த பேட்டி: மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் மானாவாரி பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 60 ஆயிரம் ஹெக்டேரில் உளுந்தும், 20 ஆயிரம் ஹெக்டேரில் பாசிப்பயிறும், 40 ஆயிரம் ஹெக்டேரில் மக்காச்சோளம் மற்றும் வெங்காயம், மல்லி, மிளகாய், கம்பு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
இந்த பயிா்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் எதிா்பாராதவிதமாக பெய்த மழையால் மானாவாரி பயிா்கள் முளைத்தும், அழுகியும் சேதமாகியுள்ளது.
இதேபோல, தாமிரவருணி பாசனத்தில், நெல், வாழை போன்ற பயிா்களும் சேதமாகியுள்ளன. பயிா் பாதிப்புகள் குறித்து ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டுள்ள போதிலும் வேளாண்மைத்துறையினா், வருவாய்த்துறையினா் மூலமாக கணக்கெடுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்அடிப்படையில், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, அவா்கள் சாகுபடி செய்துள்ள செலவீன அடிப்படையில் உரிய நிவாரணம் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். குத்தகை அடிப்படையில் நிலத்தை பெற்று மானாவாரி பயிா்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...