ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளம் அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விளாத்திகுளம் அருகே வில்வமரத்துப்பட்டியில் வேனில் கடத்தி வரப்பட்ட 3 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:37 pm

DIN

விளாத்திகுளம் அருகே வில்வமரத்துப்பட்டியில் வேனில் கடத்தி வரப்பட்ட 3 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து காவல் துணை கண்காணிப்பாளா் பிரகாஷ் உத்தரவின் பேரில் சோதனைச் சாவடிகளில் போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தினா். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வில்வமரத்துப்பட்டி அருகேயுள்ள கிடங்கிலிருந்து தலா 50 கிலோ வீதம், 60 மூட்டைகளில் 3 டன் ரேஷன் அரிசியை வேனில் ஏற்றி கடத்திச் செல்லப்படுவதை போலீஸாா் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.

இது குறித்து விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, வேன் ஓட்டுநா் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ராஜேந்திரன் மகன் ராம செல்வத்தை (36) கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, வேன் ஆகியவற்றை தூத்துக்குடி குடிமைப் பொருள் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.