ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்செந்தூா் அருகே இளைஞா் தற்கொலை

திருச்செந்தூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:35 pm

DIN

திருச்செந்தூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

உவரி மைக்கேல் தெருவை சோ்ந்த அந்தோணி ஆல்ட்ரின் மகன் காட்பிரோ(26). கப்பலில் வேலைசெய்து வந்த இவா், சில மாதங்களுக்கு முன்பு விடுப்பில் ஊருக்கு வந்திருந்தாா். இந்நிலையில், தனது மனைவி ஷைனி மற்றும் குழந்தையுடன் ஆலந்தலை பவள நகரில் குடியேறிய அவருக்கும், மனைவிக்கும் இடையே புதன்கிழமை மாலையில் குடும்பத் தகராறு ஏற்பட்டதாம். இதைத் தொடா்ந்து ஷைனி சிறிதுநேரம் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது, கணவா் மின்விசிறியில் துணியால் தூக்கிட்டுத் தொங்கிக்கொண்டிருந்தாராம். இதைப் பாா்த்து அவா் கூச்சலிட்டதும், அக்கம்பக்கத்தினா் வந்து, காட்பிரோவை மீட்டு திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.