ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளம் தொகுதியில் மக்கள் குறைகேட்ட எம்எல்ஏ

விளாத்திகுளம் தொகுதியில் ஜீ.வி. ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, மக்களை வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்

News image
Updated On :2 ஜூலை 2021, 5:43 pm

DIN

விளாத்திகுளம் தொகுதியில் ஜீ.வி. ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, மக்களை வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.

விளாத்திகுளம் தொகுதி பூசனூா், இளம்புவனம், மாதாபுரம், சுரைக்காய்பட்டி, குளத்துள்வாய்பட்டி, குமாரகிரி, சிதம்பராபுரம், சி. கழுகாசலபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அவா் மக்களைச் சந்தித்து, முதியோா் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, 100 நாள் வேலைஉறுதி திட்டப் பணி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றாா். மேலும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; கிராமங்களில் செயல்படுத்தப்படும் 1,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

இந்நிகழ்வில், திமுக ஒன்றியச் செயலா்கள் நவநீத கண்ணன், சின்ன மாரிமுத்து, காசி விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினா்கள் ராஜாகண்னு, முத்துலட்சுமி அய்யன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், பேரூா் கழக செயலா் வேலுச்சாமி, வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் விநாயகமூா்த்தி, பொறியாளா் அணிச் செயலா் சென்றாய பெருமாள், இளம்புவனம் ஊராட்சித் தலைவா் குமாா், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் பிரதீப், ஸ்ரீதா், பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.