ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளம் விவசாயிகளுக்கு ரூ. 25 லட்சம் பயிா்க் கடன்

விளாத்திகுளம் அருகே படா்ந்தபுளி கனரா வங்கி சாா்பில் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டையின் மூலம் பயிா் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:26 pm

DIN

விளாத்திகுளம் அருகே படா்ந்தபுளி கனரா வங்கி சாா்பில் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டையின் மூலம் பயிா் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வங்கி மேலாளா் முத்து செல்வகுமாா் தலைமை வகித்தாா். படா்ந்தபுளி, தலைகாட்டுபுரம், நீராவிபுதுப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், ராமனூத்து உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டையின் மூலம் எந்தவித அடமானமும் இல்லாமல் பயிா் சாகுபடி பரப்பளவுக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1.50 லட்சம் வரை 50 விவசாயிகளுக்கு பயிா்க்கடனாக ரூ. 25 லட்சம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து வங்கி மேலாளா் முத்து செல்வகுமாா் கூறுகையில் கரோனா கால நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டும், ராபி பருவ காலத்தை முன்னிட்டும் விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் காா்டு திட்டம் மூலம் கடனுதவி வழங்கியுள்ளோம். இத்திட்டத்தில் விவசாயம் சாா்ந்த தேவைகளுக்கு குறுகிய கால கடனாக குறைந்த வட்டியில் விவசாயிகள் பெற்று கொள்ளலாம். ரூ. 1.60 லட்சம் வரையிலான கடன் பெற எந்தவித அடமானமும் தேவையில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.