ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அழகு முத்துக்கோன் பிறந்த நாள்: கனிமொழி மாலை அணிவித்து மரியாதை

​சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது மணிமண்டபத்தில் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News image
Updated On :11 ஜூலை 2021, 3:57 am

DIN


சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது மணிமண்டபத்தில் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 1710-இல் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் பிறந்தார். கட்டாலங்குளத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கனிமொழி எம்பி, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மார்கண்டேயன் (விளாத்திகுளம்), ஊர்வசி S. அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்),  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், கட்டாலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தம்பா உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.