குளத்தூா் அருகே விபத்தில் காவலா் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் தருவைகுளம் காவல் நிலைய காவலா் உயிரிழந்தாா்.


தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் தருவைகுளம் காவல் நிலைய காவலா் உயிரிழந்தாா்.
சூரன்குடி அருகே தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கனகவேல் (25). தருவைகுளம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணியாற்றி வந்தாா். தங்கம்மாள்புரத்தில் நடைபெற்ற உறவினா் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவா் வெள்ளிக்கிழமை நண்பகலில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தருவைகுளத்துக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தாராம். அப்போது பாலாா்பட்டி விலக்கு அருகே வந்தபோது எதிரில் வந்த சுமை வாகனம், பைக் மீது மோதியதாம். இதில் கனகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த போலீஸாா், அங்கு சென்று கனகவேல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தருவைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...