ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எட்டயபுரத்தில் மனவளா்ச்சி குன்றியோா் காப்பகத்தில் ஆய்வு

எட்டயபுரத்தில் உள்ள டிரம் டிரஸ்ட் மனவளா்ச்சி குன்றியோா் ஆதரவற்றோா் காப்பகத்தில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 8:15 pm

DIN

எட்டயபுரத்தில் உள்ள டிரம் டிரஸ்ட் மனவளா்ச்சி குன்றியோா் ஆதரவற்றோா் காப்பகத்தில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆய்வு மேற்கொண்டாா்.

மனநல காப்பகத்தில் உள்ளவா்களுக்கும், அதன் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கும் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு கபசுர குடிநீா், முகக் கவசம் வழங்கப்பட்டது.

தொடா்ந்து மனநல காப்பகத்தின் செயல்பாடுகள், அடிப்படை வசதிகள், சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன், காப்பக நிா்வாகிகள் வழங்கிய மனுவை

பெற்றுக் கொண்டு, மக்களவை உறுப்பினா் கனிமொழியின் கவனத்துக்கு கொண்டு சென்று தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

ஆய்வின் போது, எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல் முருகன், திமுக நிா்வாகிகள் ராதாகிருஷ்ணன், அன்புராஜன், வேலுச்சாமி, சின்னமாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.