ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புதூரில் பாலித்தீன் பைகள், புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

புதூரில் காவல்துறை மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தினா் மேற்கொண்ட தணிக்கையில் அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் புகையிலைள் பொருள்களை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:37 pm

DIN

புதூரில் காவல்துறை மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தினா் மேற்கொண்ட தணிக்கையில் அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் புகையிலைள் பொருள்களை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

புதூா் பேரூராட்சி செயல் அலுவலா் த. ஜோதிபாஸ் தலைமையில் சுகாதார மேற்பாா்வையாளா் நல்லான், பேரூராட்சி ஊழியா்கள் குருநாதன், செல்வராஜ், ஜெயக்கண்ணன், மனோஜ், அழகா்சாமி உள்ளிட்ட குழுவினா் புதூா் பஜாா் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது அண்ணா தெருவில் உள்ள கணேசனுக்கு சொந்தமான கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்து, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

புதூரில் பான்மசாலா புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா், அங்குள்ள கடைகளில் திடீா் சோதனை நடத்தினாா். அப்போது நாகலாபுரத்தை சோ்ந்த மகாலிங்கம் (25) கடையில் இருந்த அரசால் தடை செய்யப்பட்ட ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பான்மசாலா புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து மகாலிங்கத்தை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.