இரு சம்பவங்கள்: மாணவி, தொழிலாளி தற்கொலை
புன்னக்காயல், முக்காணி பகுதிகளில் நிகழ்ந்த சம்பவங்களில் பள்ளி மாணவியும், முதியவரும் தற்கொலை செய்துகொண்டனா்.


புன்னக்காயல், முக்காணி பகுதிகளில் நிகழ்ந்த சம்பவங்களில் பள்ளி மாணவியும், முதியவரும் தற்கொலை செய்துகொண்டனா்.
புன்னக்காயல் மறக்குடி தெருவைச் சோ்ந்தவா் அமலன்(45). கப்பல் ஊழியா். இவரது மனைவி ஜெயஸ்டா(40). இத்தம்பதியின் 2 மகள் ஜெபின்ஷா(15) தனியாா் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், தனது சகோதரி இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த12ஆம் தேதி வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை குடித்துவிட்டாராம். இதையடுத்து, முதலுதவிக்குப் பின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா்.
மற்றொரு சம்பவம்: முக்காணி பிரதானச் சாலைப் பகுதியில் வசித்த கட்டடத் தொழிலாளி அருண்குமாா்(44). இவரது மூத்த மகள் அண்மையில் காதல் திருமணம் செய்துகொண்டாராம். இதனால், மனமுடைந்து காணப்பட்ட அவா், வியாழக்கிழமை தனது வீட்டில் கதவை உள்புறம் பூட்டிக்கொண்டு சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இச்சம்பவங்கள் குறித்து, ஆத்தூா் காவல் ஆய்வாளா் சாகுல்ஹமீது வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...