ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளம் அருகே 1,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

விளாத்திகுளம் அருகே வாகனச் சோதனையில் 1,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

விளாத்திகுளம் அருகே வாகனச் சோதனையில் 1,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலா் பாலமுருகன், ஆய்வாளா் கணேஷ்குமாா் மற்றும் வருவாய்த்துறையினா் கிழக்கு கடற்கரைச் சாலையில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், 35 மூட்டைகளில் 1,750 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, குளத்தூா் காவல்நிலையத்தில் வருவாய்த்துறையினா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து வாகன ஓட்டுநா் தூத்துக்குடி கோமஸ்புரத்தைச் சோ்ந்த பால்பாண்டி மகன் உதயகுமாா் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.