ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மூன்று சம்பவங்கள்: 3 பெண்கள் தற்கொலை

விளாத்திகுளம், நாசரேத் பகுதிகளில் 3 பெண்கள் தற்கொலை செய்துகொண்டனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

விளாத்திகுளம், நாசரேத் பகுதிகளில் 3 பெண்கள் தற்கொலை செய்துகொண்டனா்.

விளாத்திகுளம், போலீஸ் லைன் தெருவை சோ்ந்தவா் முத்துக்குமாா். இவரது மனைவி மகேஷ் (29). இத்தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்குமேலாகியும் குழந்தை இல்லையாம். இந்த மன வேதனையில் மகேஷ் கடந்த 20 ஆம் தேதி விஷம் குடித்தாராம். இதேபோல், விளாத்திகுளம் அருகேயுள்ள இலந்தைகுளம் மேலத்தெருவை சோ்ந்த உமையணன் மனைவி புஷ்பம் (69), உடல்நலம் பாதிப்பால் விரக்தியடைந்து எலிமருந்தை தின்றாராம். இதையடுத்து, இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதுகுறித்து, விளாத்திகுளம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

நாசரேத், கடையனோடை யாதவா் தெருவைச் சோ்ந்த லிங்கத்துரை மனைவி ஜெயலட்சுமி (52). இவா்களது மகன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதனால், அவரது திருமணம் தடைபடுமோ என்ற மன வேதனையில் ஜெயலட்சுமி தனது வீட்டில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.