சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டியில் காவல் உதவி ஆய்வாளா் மரணம்

கோவில்பட்டியில் காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசகம் திங்கள்கிழமை அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:06 pm

DIN

கோவில்பட்டியில் காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசகம் திங்கள்கிழமை அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தாா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய இவா் அண்மையில் தனது காலில் மேற்கொண்ட அறுவை சிகிச்சை காரணமாக ஜனவரி 19 ஆம் தேதியில் முதல் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தாா். இந்நிலையில் அவருக்கு, ஞாயிற்றுக்கிழமை இரவு நெஞ்சுவலி ஏற்பட்டதாம். அதையடுத்து, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். அவரது உடலுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன், ஆய்வாளா்கள் முத்து, உதவி ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலும், ஆயுதப்படை உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் 21 குண்டுகள் முழங்க, உடல் தகனம் செய்யப்பட்டது. இறந்த சீனிவாசகத்துக்கு மனைவி, ஒருமகள், இரண்டு மகன்கள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.