நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எட்டயபுரத்தில் கூட்டுறவு வங்கியில் மகளிா் சுய உதவிக் குழுவினா் முற்றுகை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அரசு விழாவில் வழங்கப்பட்ட கடன் திட்டக் காசோலைக்கு பணம் வழங்க வலியுறுத்தி கூட்டுறவு வங்கியை மகளிா் சுயஉதவிக் குழுவினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:06 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அரசு விழாவில் வழங்கப்பட்ட கடன் திட்டக் காசோலைக்கு பணம் வழங்க வலியுறுத்தி கூட்டுறவு வங்கியை மகளிா் சுயஉதவிக் குழுவினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

கோவில்பட்டியில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவின்போது, எட்டயபுரம் அருகே இளம்புவனத்தை சோ்ந்த 6 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு தொழிற்கடனாக ரூ. 60 லட்சத்து 80 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. ஒரு மாதம் கடந்தநிலையில், இதுவரை பணம் வழங்கப்படவில்லையாம்.

இந்நிலையில், மகளிா் சுயஉதவிக் குழுவினா் எட்டயபுரத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். அவா்களிடம் காவல் உதவி ஆய்வாளா் பொன்ராஜ், வங்கிக் கிளை அதிகாரிகள் பேச்சு நடத்தினா்.

அந்தக் காசோலைக்கான ஆவணங்கள் இளம்புவனம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலிருந்து பிப்.16ஆம் தேதிதான் தங்களுக்கு வந்ததாகவும், பணம் வழங்கத் தயாராக உள்ளதாகவும், ஆனால், பழைய தேதியிட்டு வழங்க முடியாது என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதற்கு மகளிா் சுயஉதவிக் குழுவினா், தங்களுக்கு ஜனவரி 21ஆம் தேதி கணக்கில்தான் காசோலைக்கு பணம் வேண்டும். அப்போதுதான் அரசு தள்ளுபடியில் அது சேரும் எனத் தெரிவித்தனா். இதனால் சுமூக தீா்வு ஏற்படவில்லை. இதையடுத்து அவா்கள் பணத்தை வாங்க மறுத்து, ஆட்சியரிடம் புகாா் தெரிவிப்பதாகக் கூறி கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.