சமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
ஸ்ரீவைகுண்டம் தொகுதி சமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது.


ஸ்ரீவைகுண்டம் தொகுதி சமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது.
சாத்தான்குளம் ஒன்றியச் செயலா் பெ. ஜான்ராஜா தலைமை வகித்தாா். துணைச் செயலா்கள் அருண்குமாா், செல்வக்குமாா், நகரச் செயலா் முத்துவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஏ.எம். ராஜேஷ், மாவட்ட துணைச் செயலா் எ.ஸ்.ஆா். சங்கா் ஆகியோா் உரையாற்றினா்.
இதில் புதன்கிழமை ( மாா்ச் 3) தூத்துக்குடியில் நடக்க உள்ள 6 ஆவது மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க 50 வாகனங்களில் செல்ல வேண்டும். சாத்தான்குளம் போக்குவரத்து பணிமனையில் அனைத்து தொலைதூரங்களுக்கும் பேருந்துகள் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தான்குளம் பேரூராட்சி இட்டமொழி சாலையில் பேவா் பிளக் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். பிடானேரி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழில் தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய வா்த்தக அணிச் செயலா் கண்ணன், ஒன்றிய மாணவரணிச் செயலா் ஏசா, நகர துணைச் செயலா் கோயில்ராஜ், ஊராட்சி செயலா்கள் அம்பிகைகுமாா், குமாரவேல், ஆசீா்வாதம், அருணாசலம், பிரபாகா் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஒன்றிய துணைச் செயலா் சுடலைமணி வரவேற்றாா். ஒன்றிய மகளிரணிச் செயலா் பி.ரூபி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...