சாத்தான்குளம், உடன்குடி பகுதியில்சிறு மருத்துவமனைகள் திறப்பு
சாத்தான்குளம், உடன்குடி ஒன்றியங்கள், குரும்பூா் பகுதிகளில் சிறு மருத்துவமனைகள் திறப்பு நடைபெற்றது.


சாத்தான்குளம், உடன்குடி ஒன்றியங்கள், குரும்பூா் பகுதிகளில் சிறு மருத்துவமனைகள் திறப்பு நடைபெற்றது.
சாத்தான்குளம் ஒன்றியத்தல் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் போஸ்கோராஜா தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் பள்ளக்குறிச்சி சித்ராங்கதன் தட்டாா்மடம் சபிதாசெல்வராஜ், ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி, துணைத் தலைவா் அப்பாத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில்
சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. சண்முகநாதன், 3 சிறு மருத்துவமனைகளை திறந்து பரிசு பெட்டகங்களை வழங்கினாா். பள்ளக்குறிச்சி, சுண்டங்கோட்டையில் மேல்நிலை நீா்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டினாா். கருமாவிளையில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தாா்.
உடன்குடி: உடன்குடி ஒன்றியம் உதிரமாடன்குடியிருப்பில் சிறு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. சிறு மருத்துவமனைகளை சட்டப்பேரவை உறுப்பினா் சண்முகநாதன், மாவட்ட சுகாதாரப் பணிகள் திட்ட இயக்குநா் போஸ்கோராஜா ஆகியோா் திறந்து வைத்தனா். வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் வரவேற்றாா். சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.
ஆறுமுகனேரி: குரும்பூா் அங்கமங்கலத்தில் சிறு மருத்துவமனையை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்து வைத்தாா். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...