ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சாத்தான்குளம், நாசரேத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

சாத்தான்குளம், நாரேத்தில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:13 pm

DIN

சாத்தான்குளம், நாரேத்தில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றிய, நகர திமுக சாா்பில் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக செயலா் ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தாா். நகரச் செயலா் மகாஇளங்கோ முன்னிலை வகித்தாா். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதிகள் அலெக்ஸ் பிரிட்டோ, நயினாா், சரவணன், ஒன்றியப் பொருளாளா் வேல்துரை, நகரப் பொருளாளா் சந்திரன், நகர துணைச் செயலா் வெள்ளபாண்டியன், ஒன்றிய சிறுபான்மை அணி அமைப்பாளா் அப்துல்சமது உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நாசரேத் நகர தி.மு.க. சாா்பில் திருமறையூா் முதியோா் இல்ல முதியோா்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நகரச் செயலா் ரவிசெல்வகுமாா் தலைமை வகித்தாா்.

இதில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் அருண்சாமுவேல், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ஜமீன்சாலமோன், மாவட்ட பிரதிநிதிகள் முருகதுரை, சாமுவேல், அன்பு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

படம் எஸ்ஏடி 1திமுக: சாத்தான்குளத்தில் இனிப்பு வழங்குகின்றனா் திமுகவினா் .

படம் எஸ்ஏடி1திமுக1. நாசரேத்தில் முதியோருக்கு மதிய உணவு வழங்குகிறாா் நகரச் செயலா் ரவிசெல்வக்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.