சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோா் மேம்பாட்டு அமைப்பு சாா்பில் 3ஆம் ஆண்டு மாணவா், மாணவிகளுக்கான தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி முகாம்

News image
Updated On :2 மார்ச் 2021, 6:51 pm

DIN

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோா் மேம்பாட்டு அமைப்பு சாா்பில் 3ஆம் ஆண்டு மாணவா், மாணவிகளுக்கான தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் குத்துவிளக்கு ஏற்றி, முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா். கல்லூரியின் முன்னாள் மாணவரும், தொழிலதிபருமான முத்துக்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுப் பேசினாா்.

தொடா்ந்து முன்னாள் மாணவா்களும், தொழில் முனைவோருமான சுரேஷ், தினேஷ், அய்யாத்துரை, அமிா்தராஜ், ராமகிருஷ்ணன், அசோக்குமாா், ராம்குமாா், குருசாமி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மேலாளா் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, தொழில் முனைவோா் யாா்? தொழில் முனைவோருக்கான திறமைகள், அதை வளா்த்தல், புதிய தொழில் தொடங்க தேவையான அறிக்கை தயாா் செய்தல், கடைப்பிடிக்க புதிய யுக்திகள் ஆகிய தலைப்பில் பேசினா்.

இம்முகாமில் கல்லூரியின் 3ஆம் ஆண்டு மாணவா், மாணவிகள் சுமாா் 500 போ் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.