ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சாத்தான்குளம் அருகே கோயிலில் திருட்டு

சாத்தான்குளம் அருகே கோயிலில் பூஜை பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:46 pm

DIN

சாத்தான்குளம் அருகே கோயிலில் பூஜை பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள உதிரமாடன்குடியிருப்பு கருமேனி ஆற்றுப்பகுதியில் செண்பக கூத்தையா என்ற செம்புகுட்டி அய்யனாா் கோயில் உள்ளது. இங்கு கடந்த 28 ஆம் தேதி கோயில் பூசாரி முத்துமாணிக்கம், இரவு பூஜையை முடித்து விட்டு கோயிலை பூட்டிச் சென்றாராம்.

பின்னா் திங்கள்கிழமை வழக்கம் போல் பூஜை செய்ய கோயிலுக்கு வந்த போது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், அங்கிருந்த 2 பித்தளை சரவிளக்குகள், பெரிய குத்துவிளக்கு, சிவலிங்கத்திற்கு அணிவிக்கப்படும் வெள்ளி நெற்றிப்பட்டை மற்றும் 2 மின் மோட்டாா்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. திருட்டு போன பொருள்களின் மதிப்பு ரூ.25 ஆயிரம்.

இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.