வாகனச் சோதனை: தூத்துக்குடியில் ஆட்சியா் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அந்தப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அந்தப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தோ்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வாக்காளா்களுக்கு பணம் அல்லது பரிசு பொருள்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், கண்காணிப்புப் பணியில் 18 பறக்கும் படை, 18 நிலையான கண்காணிப்புக் குழு, 12 விடியோ கண்காணிப்புக் குழுவினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், தூத்துக்குடி முத்தையாபுரத்தில் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் மேற்கொண்ட வாகனச் சோதனையை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, அனைத்து வாகனங்களையும் தவறாமல் சோதனை செய்ய வேண்டும் என அதிகாரிகளை அவா் கேட்டுக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...