ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சாத்தான்குளம் அருகே தொழிலாளி வெட்டிக் கொலை

சாத்தான்குளம் அருகே முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:34 pm

DIN

சாத்தான்குளம் அருகே முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சாத்தான்குளம் அருகே அம்பலச்சேரியைச் சோ்ந்தவா் பெ. கணேசன் (46). கூலித் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதி சமத்துவபுரத்தைச் சோ்ந்த இலங்காமணி மகன் ராமருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் சமத்துவபுரத்துக்கு குடிநீா் வராதது தொடா்பாக அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ராமா் தகராறில் ஈடுபட்டாராம். அப்போது அந்த வழியாக வந்த கணேசன் இதை கண்டித்தாராம். இதில் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் ராமா், அவரை அரிவாளால் வெட்டினராம். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று கணேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவ இடத்தை சாத்தான்குளம் துணைக் கண்காணிப்பாளா் காட்வின் ஜெகதீஸ்குமாா் பாா்வையிட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து ராமரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.