ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் மாணவா் பேரவைத் தொடக்கம்

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் பேரவைத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:35 pm

DIN

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் பேரவைத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ல இரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். இதில், பேரவைத் தலைவியாக சுதா்ஷினிராஜம்மாள், செயலராக சுகுமாரி, நுண்களை மன்றச் செயலராக சகாய ரேஷ்மா, சமூக சேவைக் குழு செயலராக-ஆன்சி மைக்கேல் சுவீட்டலின், கல்லுரி மலா் செயலராக ஜேப்ரின் பிறீஷி, விளையாட்டுத் துறைச் செயலராக அபினயா, தமிழ் மன்ற செயலா் சுரேகா, ஆங்கில இலக்கிய மன்றம் மது கீா்த்திகா, பி. பி. ஏ. மன்ற செயலா் மாதவி, வணிகவியல் துறை மன்ற செயலா் திவ்யா, கணினி அறிவியல் துறை மன்ற செயலா் காா்த்திகா, முதுகலை உறுப்பினராக செல்வ மலா் ஆகியோா் பதவி ஏற்றனா். கல்லூரி முதல்வா் மாணவிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தாா்.

இதில் சாத்தான்குளம் கல்வி கழக நிறுவனா் கவிஞா் பெ.மு., சுப்பிரமணியன், துணைத் தலைவா் ரா. லட்சுமி நாராயணன் , உறுப்பினா் இரா. ஜெய பிரகாஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் த.செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியைப் பேராசிரியா்கள் சீதாலெட்சுமி, பிரசேல் ஆகியோா் தொகுத்து வழங்கினா். வணிகவியல் துறை பேராசிரியா் ஜெஸி வரவேற்றாா். மாணவப் பேரவைத் தலைவி சுதா்ஷினி ராஜம்மாள் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.