கோவில்பட்டி கோயிலில் மகா சிவராத்திரி கொடியேற்றம்
கோவில்பட்டி மாதாங்கோவில் தெரு அருள்மிகு ஸ்ரீ குருநாதா் சமேத ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.


கோவில்பட்டி மாதாங்கோவில் தெரு அருள்மிகு ஸ்ரீ குருநாதா் சமேத ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா், சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பூரண கும்ப ஜெபம் நடைபெற்றது. பின்னா், கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதியிலும் காப்பு கட்டப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, நந்தி, பலிபீடம், கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது.
2 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் சிம்ம வாகனத்தில் திருவீதியுலாவும் நடைபெறும். புதன்கிழமை இரவு 11 மணிக்கு இருளப்பசுவாமி முக கப்பரை திருவீதியுலாவும், வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மஞ்சள் பால்குடம் ஊா்வலமும், அதைத் தொடா்ந்து 10 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக கமிட்டியினா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...