ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தாமரைமொழியில் கோயிலுக்கு செல்லு பாதை ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் புகாா்

தாமரைமொழியில் கோயிலுக்கு செல்லும் இடத்தை தனிநபா் ஆக்கிரமித்து வீட்டுமனை அமைத்து வருவதாகவும், அதனை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் சாத்தான்குளம் வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:36 pm

DIN

தாமரைமொழியில் கோயிலுக்கு செல்லும் இடத்தை தனிநபா் ஆக்கிரமித்து வீட்டுமனை அமைத்து வருவதாகவும், அதனை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் சாத்தான்குளம் வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழியில் ஆதீனத்துக்கு பாத்தியப்பட்ட இடத்தில் ஸ்ரீவடுகச்சிஅம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை 4 தலைமுறைக்கு மேலாக அக்கிராமமக்கள் பராமரித்து வழிப்பட்டு வருகின்றனா். இந்நிலையில் அருகில் உள்ள பிரகாசபுரத்தைச் சோ்ந்த தனிநபா் ஆதீனத்திடம் அப்பகுதியில் உள்ள இடத்தை குத்தகைக்கு பெற்று, அதனை வீட்டு மனையாக விற்பனை செய்து வருகிறாராம். மேலும் ஸ்ரீவடுகச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் பகுதியை அந்த மறித்து ஆக்கிரமித்து வைத்துள்ளாராம்.

இந்நிலையில் கோயிலில் வருஷாபிஷேகம் நடத்துவது தொடா்பாக கிராமமக்கள் கோயிலுக்கு சென்றபோது , அந்த நபா் இடம் தொடா்பாக தகராறில் ஈடுபட்டாராம். இதையடுத்து, கிராம மக்கள் தாமரைமொழி ஊராட்சித் தலைவா் சாந்தா தலைமையில் சுமாா் 50 போ் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது அங்கு வந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா், தோ்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், போராட்டம் மற்றும் கூட்டமாக கூட அனுமதியில்லை, குறிப்பிட்ட நபா்கள் மட்டும் சென்று மனு அளிக்கலாம் என்று தெரிவித்தாா்.

அதன்பின்னா் ஊராட்சித் தலைவா் சாந்தா உள்பட 5 போ் வட்டாட்சியா் மனு அளிக்க சென்றனா். அப்போது வட்டாட்சியா் , வேறு பணிக்கு சென்றிருந்தமையால், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் கோபாலிடம்மனு அளித்தனா். மனுவை பெற்ற அவா், இது குறித்து வட்டாட்சியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.