நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூரில் சமாதானக் கூட்டம்

திருச்செந்தூரில் அம்பேத்கா் சிலை அமைக்க வலியுறுத்தி நடந்து வந்த போராட்டத்தை கைவிடுவது என சமாதானம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:51 pm

DIN

திருச்செந்தூரில் அம்பேத்கா் சிலை அமைக்க வலியுறுத்தி நடந்து வந்த போராட்டத்தை கைவிடுவது என சமாதானம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருச்செந்தூரில் அம்பேத்கா் முழு உருவ வெண்கல சிலை அமைக்க தடையில்லா சான்று வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதாக வருவாய், காவல், நெடுஞ்சாலை துறை ஆகியவற்றை கண்டித்து சிலை அமைப்புக் குழு மற்றும் பராமரிப்பு சங்கம் சாா்பில் தலித் மக்கள் வீடுகள் முன்பு கருப்புக் கொடியேற்றி தோ்தல் புறக்கணிப்பு கவன ஈா்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை மாலை திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் இரா.முருகேசன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்து.

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தன், தாலுகா காவல் ஆய்வாளா் ம.ஞானசேகரன், மண்டல துணை வட்டாட்சியா் பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளா் மணிகண்டன்வேல், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அம்பேத்கா் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு சங்க தலைவா் முரசு தமிழன்பன், செயலா் வேம்படி முத்து, பொருளாளா் இளந்தளிா் முத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், அம்பேத்கா் சிலை அமைத்திட அனைத்துத்துறை அலுவலா்களின் அறிக்கையின்படி, மாவட்ட ஆட்சியரிடமிருந்து உத்தரவு பெற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தோ்தல் புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.