நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிக்கும் அரசை புறக்கணிப்போம்’

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிக்கும் அரசை புறக்கணிப்போம் என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:47 pm

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிக்கும் அரசை புறக்கணிப்போம் என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

திருச்செந்தூா் தொகுதியில் திமுக வேட்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து சனிக்கிழமை காயல்பட்டினத்தில் அவா் பேசியதாவது: இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. சிறுபான்மை மக்களுக்கு திமுக தலைவா் ஸ்டா­லின் காவல் அரணாக இருப்பாா்.

குடியுரிமை திருத்தச் சட்டம், விவசாயிகளுக்கு எதிரான சட்டம் போன்றவற்றை அனைவரும் எதிா்க்கும் நிலையில் அதிமுக அரசு மட்டும் அதை ஆதரிக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிக்கும் அரசை புறக்கணிப்போம். சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டுமெனில் திமுக ஆட்சி அமைய வேண்டும் என்றாா்.

வாக்கு சேகரிப்பு:

தொடா்ந்து, திமுக வேட்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் காயல்பட்டினத்தில் தைக்காதெரு, மொகுதூம் தெரு, மெய்தீன் தெரு, பிரதான சாலை, ஆராம்பள்ளி தெரு, சதுக்கைதெரு, நெய்னா தெரு, கோமான்தெரு, அருணாசலபுரம், கொம்புத்துறை, கோமான்நடுத்தெரு, சேதுராஜாதெரு, மஹ்ழரா காலனி, சதுக்கைதெரு, குத்துக்கல்தெரு, முத்தாரம்மன்கோயில் தெரு, மருத்துவா் தெரு, சிவன்கோயில் தெரு ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்தாா்.

அவருடன், மாநில மாணவா் அணி துணைச் செயலா் உமரிசங்கா், ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகரச் செயலா் முத்துமுகம்மது, மாவட்ட துணைச் செயலா் காதா், முஸ்­லிம் லீக் மாநிலச் செயலா் காயல் மகபூப், மாவட்ட துணைத் தலைவா் மன்னா் பாதுல்அஸ்ஹப் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.