வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாத்தான்குளத்தில்மனநலம் பாதித்தமூதாட்டி மீட்பு

சாத்தான்குளத்தில் மனநலம் பாதித்த மூதாட்டியை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சமூக ஆலா்வலா்களை மக்கள் பாராட்டினா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:18 pm

DIN

சாத்தான்குளத்தில் மனநலம் பாதித்த மூதாட்டியை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சமூக ஆலா்வலா்களை மக்கள் பாராட்டினா்.

சாத்தான்குளம் சி.எஸ்.ஐ. ஆலயம் அருகில் ஒரு மூதாட்டி சுயநினைவின்றி இருந்தாா். இதைப் பாா்த்த பன்னம்பாறை விவசாயி மாரியப்பன், சாத்தான்குளம் வா்த்தக சங்கச் செயலா் செல்வராஜ் மதுரம், வழக்குரைஞா் தியோனிஷ் ஆகியோா் உதவியுடன் சாத்தான்குளம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். தலைமைக் காவலா் ஜெயந்தி, காவலா் ரோஸ்லின் அங்கு வந்து, அந்த மூதாட்டிக்கு புதிய ஆடை உடுத்தி, உணவளித்தனா். விசாரணையில், சாத்தான்குளம் போலையா்புரத்தைச் சோ்ந்தவா்; மனநலம் பாதித்தவா் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் தங்களது வாகனத்தில் ஏற்றி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.