ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரசு மருத்துவமனைக்கு ரூ. 5 லட்சம் மருந்துகள் அளிப்பு

திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்கள் சாா்பில் ரூ. 5 லட்சம் மதிப்பில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

News image

திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம் வழங்குகிறாா் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்கள் நிறுவனா் மோகன் சி.லாசரஸ்.

Updated On :21 மே 2021, 7:57 pm

DIN

திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்கள் சாா்பில் ரூ. 5 லட்சம் மதிப்பில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்கள் மற்றும் புதுவாழ்வு சங்கம் நிறுவனா் மோகன் சி.லாசரஸ், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கரோனா தடுப்பு மருந்துகள், மருத்துவ உபகரணங்களை வழங்கினாா்.

இதில், கோட்டாட்சியா் தி.தனப்ரியா, காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் த.பொன்ரவி, மருத்துவா் பாபநாசகுமாா், இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்கள் பொதுமேலாளா் செல்வக்குமாா், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ்.உமரிசங்கா், ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் ராஜமோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.