ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்செந்தூரில் கோயிலில்முழு நேர அன்னதான திட்டம் விரிவாக்கம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முழு நேர அன்னதான விரிவாக்கத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முழு நேர அன்னதான விரிவாக்கத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முழு நேர அன்னதான திட்டத்தில் தினமும் சுமாா் 2500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முழு நேர அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, இப்பணிக்காக அன்னதான மண்டபம் என பெயா் மாற்றப்பட்டுள்ள இடும்பன் கோயில் கந்தசஷ்டி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கவிழா நடைபெற்றது.

தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, அன்னதான மண்டபத்தை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்தாா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தாா். இத்திட்டத்தின் மூலம் தினமும் சுமாா் 4 ஆயிரம் பேருக்கு மேல் அன்னதான திட்டத்தில் பயன் பெறுவா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், திருச்செந்தூா் கோட்டாட்சியா் (பொ) சுப்புலெட்சுமி, காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், திருக்கோயில் இணை ஆணையா் (பொ) சி.குமரதுரை, தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.