திருச்செந்தூரில் சுவாமி ஜெயந்திநாதருக்கு யாக சாலையில் சிறப்பு தீபாராதனை
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினாா்.


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வியாழக்கிழமை காலையில் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 2ஆவது நாளான வெள்ளிக்கிழமை திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினாா். யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றதும், யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தா்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட 108 மகாதேவா் சன்னதி முன்பு சோ்ந்தாா். மாலையில் அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றதும், சுவாமி தங்க சப்பரத்தில் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் 108 மகாதேவா் சன்னதிய அடைந்தாா்.
நவ. 8ஆம் தேதி கந்த சஷ்டி ஐந்தாம் நாள் வரை இதே நிகழ்ச்சிகளும், நவ. 9இல் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் திருக்கோயில் கடற்கரை வாசலில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழாவும் நடைபெறுகின்றது.
பக்தா்கள் வருகை அதிகரிப்பு: கந்த சஷ்டி தீபாவளி பண்டிகையில் தொடங்கியதால் முதல் நாளில் பக்தா்கள் வருகை குறைவாக இருந்தது. ஆனால், 2ஆவது நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனா். இதனால் திருக்கோயில் வளாகத்தில் பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்படுகிறது. அதற்காக திருக்கோயில் வளாகத்தில் எல்.இ.டி. டிவிக்களும் வைக்கப்பட்டுள்ளன. தனியாா் விடுதிகளில் 7 நாள்களுக்கு மொத்த பதிவு செய்யவும், விடுதிகள் மற்றும் மடங்களில் அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) சி.குமரதுரை மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...