தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘விவசாயிகள் ராபி பருவ பயிா்க் காப்பீடு செய்யலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பருவ பயிா்களுக்கு திருந்திய பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:54 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பருவ பயிா்களுக்கு திருந்திய பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இம்மாவட்டத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான பயிா்க்காப்பீட்டில் கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூா், ஓட்டப்பிடாரம், கருங்குளம், தூத்துக்குடி, ஆழ்வாா்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூா், உடன்குடி வட்டாரங்களின் 225 குறுவட்டங்களில் நெல்-3, ராபி பருவ இதர பயிா்களுக்கும் (சோளம், கம்பு, மக்காசோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி, கரும்பு) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

உளுந்து பயிருக்கு (ரூ.199) பதிவுசெய்ய நவ. 15, பாசிப்பயறு ( ரூ.199), மக்காச்சோளம் ( ரூ.209), பருத்திக்கு (ரூ.575) நவ. 30, சோளம் (ரூ.110), நிலக்கடலைக்கு (ரூ.252) டிச. 15, கம்பு ( ரூ.104), எள் (ரூ.107), சூரியகாந்திக்கு (ரூ.143) டிச. 31, துவரை, கோடைப் பருவ நெல்பயிருக்கு (ரூ.445) ஜன. 31, கரும்புக்கு (ரூ.2,600) ஆக.31ஆகிய தேதிகளுக்குள் பிரீமியம் செலுத்த வேண்டும் என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

கோவில்பட்ட வட்டார விவசாயிகள் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைந்து, மேற்கண்ட கட்டணத் தொகையை அந்தந்த தேதிகளுக்குள் செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ளலாம் என கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநா் நாகராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.