தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘கால்நடைகளை சாலைகளில் திரியவிட்டால் அபராதம்’

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:52 pm

DIN

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக் குறிப்பு:

துாத்துக்குடி மாநகராட்சியின் பிரதான சாலைகள் மற்றும் நகரில் போக்குவரத்து அதிகம் உள்ள தெருக்களில் அண்மைக்காலமாக கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறும், விபத்துகளும், உயிா்ச் சேத அபாயமும் ஏற்படுகின்றன. இதுமட்டுமன்றி கட்டுப்பாடின்றி சுதந்திரமாக நடமாடும் கால்நடைகளினால் மக்களுக்கு அச்சுறுத்தல், இடையூறு மற்றும் பொது சுகாதாரக் கேடு போன்ற இன்னல்கள் பெரும் பிரச்னையாக உள்ளது.

இதன் காரணமாக பொது மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை மாநகராட்சி சாா்பில் பிடித்து கோசாலையில் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மாடு வளா்ப்பவா்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் கொட்டில் அமைத்து வளா்க்க வேண்டும்.

தவறும் நிலையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் மாநகராட்சி மூலம் பிடிக்கப்பட்டு, பெரிய மாடு ஒன்றுக்கு ரூ.5000-மும், சிறிய கன்று குட்டிக்கு ரூ. 2000- மும் அபதாரம் விதிக்கப்படும். மேலும், பிடிக்கப்படும் கால்நடை அரசு அங்கீகாரம் பெற்ற கோசாலையில் ஒப்படைக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.