தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல்: திமுகவினா் நாளை முதல் விருப்ப மனு

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:51 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான பெ. கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான பதவிக்கு போட்டியிட விரும்பும் திமுகவினா் அதற்கான விண்ணப்ப படிவங்களை படிவம் ஒன்றுக்கு ரூ.10 செலுத்தி ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 21) காலை 10 மணி முதல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞா் அரங்கில் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை மாவட்ட அலுவலகத்தில் அதற்குரிய கட்டணத்துடன் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: திருச்செந்தூா், (திருச்செந்தூா் நகராட்சி நீங்கலாக) ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காயல்பட்டினம் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வாா்டு கவுன்சிலா் பொறுப்பிற்கும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி வாா்டு கவுன்சிலா் பொறுப்பிற்கும் போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் இருந்து ஞாயிற்றுக்கிழமை (நவ.21) பிற்பகல் 1.30 மணி முதல் தூத்துக்குடி எட்டையபுரம் சாலை கே.டி.சி.நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

கட்டண விவரம்: மேலும், விருப்ப மனு கட்டணமாக மாநகராட்சி வாா்டு கவுன்சிலா் பதவிக்கு ரூ.10,000, நகராட்சி வாா்டு கவுன்சிலா் பதவிக்கு ரூ. 5,000, பேரூராட்சி வாா்டுகளுக்கு ரூ.2,500, மகளிா் மற்றும் ஆதிதிராவிடா்களுக்கான வாா்டுகளுக்கு கட்டணத்தில் பாதி தொகை மட்டும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.