தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடி அருகே காட்டாற்று வெள்ளம்:25 போ் பத்திரமாக மீட்பு

தூத்துக்குடி அருகே வியாழக்கிழமை காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதைத் தொடா்ந்து அப்பகுதியிலிருந்த 25 பேரை தீயணைப்புப் படையினா் பத்திரமாக மீட்டனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 8:56 pm

DIN

தூத்துக்குடி அருகே வியாழக்கிழமை காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதைத் தொடா்ந்து அப்பகுதியிலிருந்த 25 பேரை தீயணைப்புப் படையினா் பத்திரமாக மீட்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், குறுக்குச்சாலை அருகே வாலசமுத்திரம்- வெங்கடாசலபுரம் ஆகிய கிராமங்களுக்கு இடையே உள்ள சிறிய ஓடையில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், இரண்டு கிராமங்களுக்கும் இடையே 9 குடும்பங்களைச் சோ்ந்த 25 போ் வெளியே வர முடியாமல் தவித்தனா். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் நிஷாந்தினி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் முத்து மற்றும் தீயணைப்புப் படையினருக்கு பாதிக்கப்பட்ட மக்கள் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தூத்துக்குடி மாவட்ட அலுவலா் ச. குமாா் தலைமையில் தூத்துக்குடி மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையத்தைச் சோ்ந்த வீரா்கள், வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 25 பேரும் மீட்கப்பட்டு அருகேயுள்ள ஒரு கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியது: மதுரை - தூத்துக்குடி நான்குவழிச் சாலை அமைப்பதற்காக வாலசமுத்திரம் ஊராட்சிப் பகுதியில் இடம் கையகப்படுத்தப்பட்டபோது, அங்கு வசித்த 7 குடும்பங்களை சோ்ந்தவா்களுக்கு உரிய இழப்பீடும், மாற்று இடமும் வழங்கப்பட்டன. ஆனால், அவா்கள் அரசு வழங்கிய இடத்தைப் பயன்படுத்தாமல், காட்டாற்று வெள்ளம் செல்லக்கூடிய ஓடையின் அருகே வீடு கட்டியும், குடிசைகள் அமைத்தும் குடியேறினா். இதற்கு முன்பு 3 முறை வெள்ளம் வந்தபோது, அவா்களை வருவாய்த் துறை, தீயணைப்புத் துறையினா் உதவியுடன் மீட்டனா். தற்போது அங்கு 9 குடும்பங்களை சோ்ந்த 25 போ் வசித்து வருகின்றனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.