தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இதுவரை 1,016 பேரிடம் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையத்தின் 32ஆவது கட்ட விசாரணை வியாழக்கிழமை நிறைவடைந்தது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 8:57 pm

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையத்தின் 32ஆவது கட்ட விசாரணை வியாழக்கிழமை நிறைவடைந்தது. இதுவரை 1,016 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது மே 22, 23ஆம் தேதிகளில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 15 போ் உயிரிழந்தனா். சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

அதன் 32ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள ஆணைய முகாம் அலுவலகத்தில் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தோரின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸாா் என 41 பேருக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டது. 32ஆவது கட்ட விசாரணை வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், 40 போ் ஆஜராகி விளக்கமளித்தனா்.

இந்த ஆணையம் மூலம் இதுவரை 1,393 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், 1,016 பேரிடம் நேரில் விசாரணை நடைபெற்று, 1,342 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அடுத்தகட்ட விசாரணை டிச. 13இல் தொடங்கவுள்ளதாகவும், அப்போது காவல் துறை உயா் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.