தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் மழை: 12 நிவாரண முகாம்களில் 981 போ் தங்க வைப்பு

தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 12 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 981 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:34 pm

DIN

தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 12 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 981 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

தூத்துக்குடி பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் மாநகராட்சிப் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நீதிமன்ற வளாகம், சிவந்தாகுளம், பிரையன்ட்நகா், தாளமுத்துநகா், மேல அலங்காரத்தட்டு, ஸ்டேட் பாங்க் காலனி, விஎம்எஸ் நகா், சின்னக்கண்ணுபுரம், மீளவிட்டான், சிதம்பரநகா், சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம், மில்லா்புரம், தபால் தந்தி காலனி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீா் குடியிருப்புகளை சூழ்ந்து காணப்படுகிறது.

275 மோட்டாா்கள்: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 220 இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை 237 மோட்டாா்கள் மூலம் அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தண்ணீா் செல்ல முடியாத இடங்களில் 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வடிகால் அமைத்து தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீா் வெளியேற்றும் பணியை அமைச்சா் பெ. கீதாஜீவன், மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ ஆகியோா் நேரில் பாா்வையிட்டு பணியை துரிதப்படுத்தி வருகின்றனா்.

மாவட்டம் முழுவதும் 275 இடங்களில் 298 மோட்டாா்கள் மூலம் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. வடிகால் அமைக்கும் பணிக்காக 39 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மழை பாதிப்பு குறித்தும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையிலும் 8 துணை ஆட்சியா், 8 வட்டாட்சியா்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

12 நிவாரண முகாம்கள்: மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இதுவரை 12 நிவாரண முகாம்களில் 981 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மூன்று வேளையும் தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, நிவாரண முகாம்களில் உள்ளவா்களுக்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆகியோா் உடைகள், போா்வைகள், பாய், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவையும் வழங்கினா்.

தொடா்ந்து, தாமிரவருணி கரையோரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்க பேரிடா் மீட்பு குழுவினா் தயாா் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் புறப்படும் இடம்: கனமழை காரணமாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், அங்கு மின் வயா்கள் பழுதானதால் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, தூத்துக்குடியில் இருந்து மைசூரு செல்லும் விரைவு ரயிலும், சென்னை செல்லும் முத்துநகா் விரைவு ரயிலும் தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: சிவப்பு எச்சரிக்கையை தொடா்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவம்பா் 27) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவித்துள்ளாா். மாவட்டத்தில் மீனவா்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்படிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.