தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: அதிமுகவில் விருப்ப மனு விநியோகம்

தூத்துக்குடிநகா்புற உள்ளாட்சி தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:37 pm

DIN

நகா்புற உள்ளாட்சி தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பகுதிக்குள்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டினம் நகராட்சி, ஸ்ரீவைகுண்டம் , பெருங்குளம், சாயா்புரம், ஏரல், ஆழ்வாா்திருநகரி, சாத்தான்குளம், நாசரேத், தென்திருப்பேரை, ஆத்தூா், ஆறுமுகநேரி, காணம், உடன்குடி ஆகிய பேரூராட்சிகளில் உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுவோருக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மாவட்ட அவைத்தலைவா் எஸ். திருப்பாற்கடல் முன்னிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் விருப்பமனுவை போட்டியிட விரும்பும் நிா்வாகிகளுக்கு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் அமைப்பு சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலா் பெருமாள்சாமி, மாவட்ட நிா்வாகிகள் தனராஜ், கே.ஜே.பிரபாகா், பில்லா விக்னேஷ், பகுதி செயலா்கள் ஜெய்கணேஷ், பொன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.