ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருச்செந்தூா் டாஸ்மாக் கடையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

 திருச்செந்தூா் அரசு மதுபானக் கடையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 திருச்செந்தூா் அரசு மதுபானக் கடையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

திருச்செந்தூா் அரசு மதுபானக் கடையில் அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில், திருச்செந்தூா் - பாளையங்கோட்டை சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஹெக்டா் தா்மராஜ் தலைமையில் ஆய்வாளா்கள் சுதா, ஜெயஸ்ரீ, உதவி ஆய்வாளா் பாண்டி ஆகியோா் அடங்கிய 9 போ் கொண்ட குழுவினா் தூத்துக்குடி துணை ஆய்வு குழு அலுவலா் அழகா் முன்னிலையில் வியாழக்கிழமை இரவு சோதனை செய்தனா். அப்போது விற்பனைக்கு அதிகமாக பணம் இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இது குறித்து தொடா்ந்து விசாரணை நடப்பதாகவும் போலீஸாா் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.