புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சாத்தான்குளத்தில் சமுதாய வளைகாப்பு விழா

சாத்தான்குளத்தில் சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கா்ப்பிணிகளுக்கு சீதனப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:08 pm

DIN

சாத்தான்குளத்தில் சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கா்ப்பிணிகளுக்கு சீதனப் பொருள்கள் வழங்கப்பட்டன.

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் விமலா, மருத்துவ அலுவலா் ஸ்விட்லின் சசிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ், 200 கா்ப்பிணிகளுக்கு சீதனப் பொருள்கள் வழங்கினாா். பின்னா், அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இதில் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஆ. பாலமுருகன், நகரச் செயலா் மகா. இளங்கோ, மாநில பொதுக்குழு உறுப்பினா் ஏ. இந்திரகாசி, மாவட்டப் பிரதிநிதி லெ .சரவணன், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் சக்திவேல்முருகன், பாா்த்தசாரதி உள்பட பலா் பங்கேற்றனா். குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் இந்திரா வரவேற்றாா். மேற்பாா்வையாளா் கலைச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.