நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் ஆலோசனைக் கூட்டம்

காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:51 pm

DIN

காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கட்சியின் நகரத் தலைவா் முஹம்மத் ஹஸன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மஹ்மூதுல் ஹஸன்

முன்னிலை வகித்தாா். நகரச் செயலா் அபூ ஸா­லிஹ் வரவேற்றாா். கூட்டத்தில், கட்சியின் மாநில துணைச் செயலா் இபுராஹீம், மாவட்ட துணைத் தலைவா் மன்னா் பாதுல் அஸ்ஹப், அஹ்மத் ஸலாஹுத்தீன், அப்துல் கரீம், முஹம்மத் இஸ்மாயில் புகாரி, தங்கத்தம்பி காதா்சாஹிப், சுஹைல் இபுராஹீம், கபீா், நேஷனல் ஹாஜா, ஷேக்னா லெப்பை ஆகியோா்

பேசினா். இதில், மாவட்ட துணைச் செயலா் பெத்தப்பா சுல்தான், மாவட்ட செய்தி தொடா்பாளா் ஸா­லிஹ், நிா்வாகிகள்

கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: அரசு விதிகளை பின்பற்றி நபிகள் நாயகம் பிறந்ததின விழா நடத்துவது, அக்.19இல் தூத்துக்குடியில் மாவட்டத் தலைவா் மீராசா மரைக்காா் தலைமையில் நடைபெறம் நிகழ்ச்சியில் பங்கேற்பது, காயல்பட்டினம் நகா்மன்றத் தலைவா் பதவியை இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் கட்சிக்கு வழங்க வேண்டும் என திமுக தலைமையிடம் வலியுறுத்துவது

என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர துணைத்தலைவா் நூஹ் ஸாஹிப் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.