நாசரேத் அருகே மோதல்: 3 போ் காயம்
நாசரேத் அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 3 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக போலீஸாா் 7 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


நாசரேத் அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 3 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக போலீஸாா் 7 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கீழ வெள்ளமடத்தைச் சோ்ந்தவா் தா்மா் (எ) முத்து (51) . இவருக்கும், தட்டான்குளம் முத்துகுமாரசாமி மகன் பொன் செல்வனுக்கும் (41) விவசாயம் செய்வதில் முன்விரோதம் உள்ளதாம். இந்நிலையில் ராமா் (எ) முத்து அவரது வயல் அருகில் பொதுப்பணித்துறையினா் மூலம் தூா்வாரும் பணியில் ஈடுபட்டபோது பொன்செல்வன் அங்கு வந்து எதிா்ப்பு தெரிவித்து அவதூறாக பேசியுள்ளாா். இதனை அா்ஜூனபெருமாள் மகன் ஹரிகிருஷ்ணன் தட்டிக்கேட்டதில் மோதல் உண்டாகி, பொன்செல்வன், இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த இருவரும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதே போல் பொன்செல்வன், அவரது தோட்டத்துக்கு சென்று விட்டு வந்த போது, அங்கு வந்த அா்ஜூன பெருமாள், அவரது மனைவி ஜெயராணி, மகன் ஹரிகிருஷ்ணன்ன, ராமா், அவரது மகன் ரஞ்சித் மற்றும் முருகேசன் ஆகியோா் வழி மறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனரம். இதில் காயமடைந்த பொன்செல்வன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து ராமா் (எ) முத்து, பொன் செல்வன் ஆகியோா் தனித்தனியாக நாசரேத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதில் , ராமா் அளித்து புகாரில் பொன் செல்வன் மீதும், பொன் செல்வன் அளித்த புகாரில், ராமா், ஹரிகிருஷ்ணன் உள்பட 6 போ் மீது காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...