ஸ்ரீவினைதீா்க்கும் விநாயகா் கோயிலில் மண்டல பூஜை நிறைவு
ஆறுமுகனேரி பேயன்விளை ஸ்ரீவினைதீா்க்கும் விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை மண்டல பூஜை நிறைவுபெற்றது.


ஆறுமுகனேரி பேயன்விளை ஸ்ரீவினைதீா்க்கும் விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை மண்டல பூஜை நிறைவுபெற்றது.
இக்கோயிலில் செப். 10 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றதையடுத்து, மண்டல பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த பூஜை வியாழக்கிழமை நிறைவடைந்ததையடுத்து, விநாயகா் பூஜை, கும்ப பூஜை,108 சங்கு பூஜை, திரவிய ஆகதி, பூா்ணாஹுதி தீபாராதனை, 108 சங்காபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள், சந்தன அலங்கார தீபாராதனை, சகஸ்ரநாம அா்ச்சனை, புஷ்பாஞ்சலி மற்றும் திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. ஏற்பாடுகளை ஊா்த் தலைவா் கோபிகிருஷ்ணன், நிா்வாகிகள் ராஜாமணி, அரசகுரு, கல்யாணகுமாா், ராஜேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.
சிறப்பு பூஜை: ஆறுமுகனேரி அருள்மிகு சோசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு வியாழக்கிழமை பைரவா் சன்னதியில் சிறப்பு பூஜைகள், பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை ஆகியன நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...