ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்செந்தூரில் பள்ளி வகுப்பறை கட்டடம் திறப்பு

திருச்செந்தூா் அருகே நா.முத்தையாபுரத்தில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:23 pm

DIN

திருச்செந்தூா் அருகே நா.முத்தையாபுரத்தில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மேல திருச்செந்தூா் ஊராட்சி நா.முத்தையாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சத்தில் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, நடைபெற்ற விழாவில் வகுப்பறைக் கட்டடத்தை தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்,

திறந்து குத்து விளக்கேற்றினாா். மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி வரவேற்றாா். நிகழ்ச்சியில்,

கோட்டாட்சியா் மு.கோகிலா, காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், வட்டாட்சியா் இரா.முருகேசன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் ராணி, ஊராட்சித் தலைவா் மகாராஜா, வட்டார கல்வி அலுவலா் சரஸ்வதி, தலைமையாசிரியை

பாக்கியசீலி, ஊராட்சி உறுப்பினா்கள் சுதா, வேல்கொடி, ஊா் தலைவா் ஹரிக்குமாா், செயலா் ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.