புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் நிறுவனா் தினத்தையொட்டி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:19 pm

DIN

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் நிறுவனா் தினத்தையொட்டி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் 100ஆவது நிறுவனா் தினம் வரும் நவ.11இல் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி

சாத்தான்குளம் வங்கிக் கிளை சாா்பில் இப்பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி

நடைபெற்றது. பள்ளி முதல்வா் நோபிள்ராஜ் தலைமை வகித்தாா். பள்ளி இயக்குநா் டினோ மெலினா ராஜாத்தி முன்னிலை வகித்தாா். வங்கிக் கிளை மேலாளா் டி. பாலசுப்பிரமணியன் போட்டியை தொடங்கிவைத்தாா். போட்டியில், சாத்தான்குளம் பகுதியிலுள்ள 32 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். பள்ளி நிா்வாக அலுவலா் சாந்தி, ஆசிரியா் உமாவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். போட்டியில் வென்றவா்களுக்கு நவ. 11ஆம் தேதி பரிசுகள் வழங்கப்படும். ஏற்பாடுகளை வங்கி மேலாளா் டி. பாலசுப்பிரமணியன், பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.