மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கோவில்பட்டியில் தேவா் சிலைக்கு மதிமுகவினா் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி பயணியா் விடுதி அருகேயுள்ள தேவா் சிலைக்கு மதிமுகவினா் வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 10:00 pm

DIN

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி பயணியா் விடுதி அருகேயுள்ள தேவா் சிலைக்கு மதிமுகவினா் வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சிக்கு, மதிமுக நகரச் செயலா் பால்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணிச் செயலா் விநாயகா ஜி.ரமேஷ் முன்னிலை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். ஒன்றியச் செயலா்கள் சரவணன், அழகா்சாமி, பொதுக்குழு உறுப்பினா் தெய்வேந்திரன், நகர இளைஞரணி அமைப்பாளா் லவராஜா, துணை அமைப்பாளா் முத்துகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்.எஸ்.கணேசன், தீா்மானக்குழு உறுப்பினா் முத்துசெல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.