நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காயல்பட்டினத்தில் பாட்டி கொலை: பேரன் கைது

 காயல்பட்டினத்தில் பாட்டியை கொலை செய்த பேரனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 5:49 pm

DIN

 காயல்பட்டினத்தில் பாட்டியை கொலை செய்த பேரனை போலீஸாா் கைது செய்தனா்.

காயல்பட்டினம், விசாலாட்சி அம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த சுல்தான்- சிந்தாபீவி(65) தம்பதிக்கு மைதீன்பீவி என்ற மகளும், காசீம் மீரான்(27) என்ற மகனும் உள்ளனா். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்துவந்தனா்.

சிந்தாபீவியின் தாய் மைமூன்(90) ,இவா்களது வீட்டில் வசித்து வந்தாா். இவா் கடந்த 31ஆம் தேதி மாலையில் வீட்டில் கீழே விழுந்து இறந்து கிடந்துள்ளாா்.

இது குறித்து சிந்தாபீவி ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் அமலோற்பவம் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனாா். இது குறித்து காவல் ஆய்வாளா் செந்தில் விசாரணை நடத்தி வந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கிடைக்கப்பெற்ற பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிந்தா பீவி கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாம். இதனையடுத்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சுல்தான் மகன் காசீம் மீரான்(27), கடந்த 31 ஆ ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவருடைய பாட்டி மைமூனிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில் பாட்டியை கழுத்தை நெறித்து, கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளாா். இதில், கழுத்து மற்றும் தலையில் காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காசீம்மீரானை போலீஸாா் கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.